(குறிப்பு: இது மறுபதிவு. முன்பதிவில் தமிழில் நேரடியாக டைப் செய்ததால் அது வலைபதிவில் சரியாக தெரியவில்லை. அதனால்
மறுபதிவு இட்டுவுள்ளேன். நன்றி வேலன் சார்.)
அன்று என் பிறந்தநாள் ...
என்றும் உன் தரிசனத்தை தொலைவில் நின்று பார்ப்பது முதல் என்
கடமையாக கொண்டாலும், அன்று எனக்கு உன் தரிசனம் மிகப்பெரிய
தேவதரிசனம் அல்லவா. அதனால் தேவதை நீ வாழும் நந்தவனத்திற்கு
(உன் வீடு) என் பிறந்தநாளில் வந்தேன். ஒரு ஏழை தெய்வத்தை நேரில்
காண போகிறான் என்றால், அவன் அடையும் பரவசத்தை போல்
பலமடங்கு என்னிதயத்திலிருந்த காதல், பட்டாம்ப்பூச்சிகள் போல்
சிறகடித்து பறந்தது. இதோ உன் நந்தவனத்தின் கதவை தட்டினேன்.
ஏதோ வேலையிலிருந்த நீ, நான்தான் என்று எப்படி கண்டுபிடித்தாய்
என்று தெரியவில்லை. தேவதைக்கு தெரியாமலா இருக்கும். வந்து
எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினாய்.
நீ தரவேண்டிய பிறந்தநாள் பரிசை நான் என் பிறந்தநாளில், உனக்கு
பரிசாக என் கவிதை படைப்புகளின் டைரியை கொடுத்தேன். நீ என்னை
அமரவைத்து விட்டு தேநீர் பருகுங்கள் என்று உபசரித்தாய். ஐயோ
தேவதை கொடுத்தது தேநீராகவா இருக்கும், அது எனக்கு
தேவாமிர்தமாகவே இருந்தது. நான் அதை பருகும்போது, நான் கொடுத்த
கவிதை படைப்புகளை ஒவ்வொன்றாய் படித்தாய். அன்றுதான்
என்கவிதைகள் அனைத்தும் விமோட்சனம் அடைந்தது. நீ படிக்கும் போது
படைப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும் முண்டியடித்து கொண்டு,
என்னைப்படிக்க சொல், என்னைப்படிக்க சொல் என்று என்னிடம்
புலம்பியது. கவிதைகளை ஒவ்வொன்றாய் படித்துமுடித்து கவிதைகள்
அனைத்தும் நன்றாக இருக்கிறது என்று சொன்னாய். அதற்கு நான்
இவற்றில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் உன்னையேதான்
பிரிதிபலிக்கிறது என்று கூறி என் பிறந்தநாள் பரிசை கேட்டேன். ஆம்
தேவதைகள் எதுவாக இருப்பினும் கேட்டால்தான் தருவார்களாம்.
அதனால்தான் நானே கேட்டேன். அதற்கு உடனே என்பிறந்தநாள் பரிசாக
இதையே வைத்துகொள் என்று சொல்லி என் கவிதை படைப்புகளையே
என்னிடம் தந்தாய். என்ன இது நான் கொடுத்ததையே என்னிடம்
கொடுக்கிறாயே என்றதற்கு, நீ தானே சொன்னாய் கவிதைகள்
அனைத்தும் என்னை பிரிதிபலிக்கிறது என்று அதான் என்னை என்
பிறந்தநாள் பரிசாக உனக்கு தருகிறேன் என்று கூறி எனக்கு
தேவதிர்ச்சியை உண்டுபண்ணினாய்.
நான் பெற்றுகொண்டேன். எல்லோருக்கும் புனிதநூல் என்று தனிதனி
நூல்கள் இருக்கும். ஆனால் எனக்கு இனிமேல் இதுதான் தேவநூல் என்று
எண்ணி என்னுடன் வைத்துக்கொண்டேன். இதோ என்காதல் வாழ்ந்து
கொண்டிருக்கும் அறையில் அந்த தேவநூல்...

சுபத்ராவின்
ReplyDeleteவருகைக்கு நன்றி